ஓடியன் படத்திற்குப் பிறகு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம் லூசிபர். முரளி கோபியின் கதையில், பிரிதிவிராஜ் சுகுமாரன் இயக்கத்தில் வெளியாகும் முதல் படம். சரி படத்தைப் பற்றிப் பார்ப்போம்.
மாநில முதலமைச்சரின் மரணம். இரண்டாம் இடத்தில இருக்கும் நபர் (சாய் குமார் ) முதல்வர் பதவிக்கு வர ஆசைப்படுகிறார். அதைத் தொடர்ந்து வரும் குழப்பங்கள். முதல்வர் குடும்பத்தைச் சூழும் சூழ்ச்சிகள். அதை எப்படி மோகன்லால் முறியடித்து முடித்துவைக்கிறார் என்பதே மீதி கதை.
நாம் பார்க்கும் அரசியல் முற்றிலும் வேறு. உள்ளே நடக்கும் விஷயங்கள் வேறு. வாரிசு அரசியல், அரசியல் கட்சிகளுக்குப் பணம் எப்படி வருகிறது. அரசியல் தொடர்பில்லாதவர்களின் ஆதிக்கம். ஆளும்கட்சியில் அவர்களுடைய தலையீடு என்பதையெல்லாம் இப்படத்தில் விரிவாகக் காணலாம்.
லாலேட்டனின் அமைதியான, ஆர்பாட்டமில்லாத நடிப்பு. வசனம் மொத்தமே இரண்டு பக்கங்களில் அடங்கிவிடும். மோகன்லால் நடித்த முந்தய சூப்பர்ஹிட் படங்களான இருபத்தியோராம் நூற்றாண்டு, நரசிம்ஹம் மற்றும் ராவணப்பிரபு வரிசையில் இப்படம் சேரும். இடைவேளைக்கு முந்தய ஆக்ஷன் பிளாக் மற்றும் சிறையில் நடக்கும் ஆக்ஷன் பிளாக் மாஸ்.
முதலைச்சரின் வாரிசாக வரும் டொவினோ தாமஸ், மகளாக மஞ்சுவாரியர், இயக்குனர் பாசில், வில்லன்கள் விவேக் ஓப்ராய் மற்றும் சாய் குமார் என அனைவரும் தம் பங்கினை அழகாகச் செய்திருக்கிறார்கள்.
கொசுறு: லூசிபர் என்ற பெயரில் அமெரிக்க ஃபாக்ஸ் தொலைக்காட்சியில் பாண்டஸி- நகைசுவை-திகில் கலந்த நாடக தொடர் 25.1.2016 முதல் மூன்று சீசன்களாக ஒளிபரப்பானது. இப்பொது நெட்பிலிக்ஸ் தொலைக்காட்சியில் நான்காவது சீசன் ஒளிபரப்பாகவிருக்கிறது.
இது மோகன்லால் ரசிகர்ளுக்கான படம்!!!
குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.
- காளிகபாலி
No comments:
Post a Comment