Wonderful Shopping@Amazon

Thursday 14 January 2021

"கிராக்" (2021)

"கிராக்" (2021)

 நீண்ட இடைவேளைக்குப் பிறகு திரையரங்கில் திரைப்படம் பார்த்தது மிகுந்த உற்சாகத்தை அளித்தது. எப்போதுமே திரையரங்கில் படம் பார்ப்பது எனக்குப் பிடிக்கும். கடைசியாக ஊரடங்கிற்கு முன்பு அல்லு அரவிந்த் நடித்து திருவிக்ரம் இயக்கிய "அலா வைகுண்டபுரமுலோ" படம் பார்த்தேன்

சரி விஷயத்துக்கு வருவோம்......

"கிராக்" படத்தின் முன்னோட்ட காணொளி என்னைப் படம் பார்க்கத் தூண்டியது. எனக்கு மட்டுமல்ல நீண்ட நாட்களாகத் திரையரங்கு சென்று படம் பார்க்கக் காத்திருந்த ஆந்திர சினிமா ரசிகர்களுக்கும் மாபெரும் விருந்தாக அமைந்திருக்கிறது இப்படம். அதற்கு முதல் நாள் வசூலே சாட்சி.

"கிராக்" கோபிசந்த்-ரவிதேஜா இணையில் வந்திருக்கும் மூன்றாவது படம். அநேகமாக இந்த வருடத்தின் முதல் தெலுங்கு பிளாக்பஸ்டர் படமாக இருக்கும் என நம்புகிறேன். ஒரு ஆர்ட் படம் சுலபமாக எடுத்துவிடலாம், ஆனால் கமர்சியல் படம் எடுப்பது கொஞ்சம் சிரமம் தான். அனைத்துத் தரப்பு பார்வையாளர்களையும் படம் திருப்திப் படுத்தவேண்டும். அது அவ்வளவு சுலபமான விஷயம் அல்ல. இந்தப் படம் அப்படி இருந்ததா என்று கேட்டால், நிச்சயமாக இருந்தது என்று சொல்வேன்.

எனக்கு மாஸ் மகாராஜா ரவிதேஜா நடித்த படங்கள் பிடிக்கும் காரணம், படம் முழுதும் இழைந்தோடும் அவருடைய அந்த எனர்ஜி லெவல். படத்தினூடே வரும் நகைச்சுவை மற்றும் ஆக்ஷன் பிளாக் எனப் படத்தையே படத்தைக் கலகலப்பாகிவிடுவார். இந்தப் படத்திலும் அது கொஞ்சமும் குறையவில்லை.

வழக்கமான போலீஸ் கதை இல்லை. ஆனால் அதைச் சொல்லியிருக்கும் விதம் அருமை. கமர்சியல் சினிமா ஃபார்முலா படி வில்லன் கதாபாத்திரம் வலுவாக இருந்தால் அதை முறியடிக்கக் கதாநாயகன் போராடுவார். இதில் சமுத்திரக்கனி வில்லன் கதாபாத்திரம் வலுவாகக் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. நமது கதாநாயகன் அதை எப்படி எதிர்கொள்கிறான் என்பது மீதி வெண் திரையில்.

ஸ்ருதிஹாசன்-ரவிதேஜா கெமிஸ்ட்ரி நன்றாக இருக்கிறது. துணைக் கதாபாத்திரங்கள் என்று சொன்னால் வரலக்ஷ்மி சரத்குமார், ஆளி மற்றும் பலர் தங்கள் பங்களிப்பை அளித்திருக்கிறார்கள். எஸ் தமனின் இசையில் சில பாடல்கள் கேட்கத் தூண்டுகிறது மற்றும் பின்னணி இசை அருமை. ஸ்டண்ட் இயக்குநர்கள் ராம்-லக்ஷ்மன் இணையின் உழைப்பு ஒவ்வொரு ஆக்ஷன் ப்ளாகிலும் தெரிகிறது.

மொத்தத்தில் இந்தப் பொங்கலுக்கு வந்திருக்கும் ஆக்ஷன் பிரியர்களுக்கான விருந்து "கிராக்"
 
 
நன்றி: Google

 குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.


காளிகபாலி 

 

 
 

No comments:

Post a Comment