மோகன்லால் நடித்த எத்தனையோ படங்களை பார்த்திருக்கிறேன். அதில் என்னுடைய விருப்ப படங்கள்... ராவணபிரபு, கிலுக்கம், ஆறாம் தம்புரான், ஸ்படிகம், நரசிம்மம், சித்ரம், தேவாசுரம், கிரீடம், காலபாணி, என்னும் எப்போழும் மற்றும் தேன்மாவின் கொம்பத்து.
அவர் ஸ்டலிலிஷாக பேசும் வசனங்கள் எனக்கு பிடிக்கும்.
"சவாரி கிரி கிரி.........", "நீ போ மோனே தினேஷா..........", "மீனுக்குட்டி...", "முத்து காவு...", "களி கனிமங்களத்தே தம்புரானோடு வேண்ட.."
2018 ன் மலையாள மொழியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய மோகன்லால் படம் "ஓடியன்". படத்தை பற்றிய செய்திகள் அவ்வப்போது படிக்க நேர்ந்தது. சரி அப்படி என்னதான் இருக்கிறது, பார்ப்போமே என்று போனேன்.
"சவாரி கிரி கிரி.........", "நீ போ மோனே தினேஷா..........", "மீனுக்குட்டி...", "முத்து காவு...", "களி கனிமங்களத்தே தம்புரானோடு வேண்ட.."
2018 ன் மலையாள மொழியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய மோகன்லால் படம் "ஓடியன்". படத்தை பற்றிய செய்திகள் அவ்வப்போது படிக்க நேர்ந்தது. சரி அப்படி என்னதான் இருக்கிறது, பார்ப்போமே என்று போனேன்.
வெளிநாட்டு பழங்குடிகள் பற்றிய சிறுகதைகளை படித்திருப்போம் / கேட்டிருப்போம். அக்கதைகளின் உள்ளடக்கம் தார்மீக அறம் பற்றி சொல்லப்பட்டிருக்கும். அறம் மீறி நடந்தால் அதற்கான விளைவுகளை சந்திக்கவேண்டிருக்கும் என்பது போல கதை இருக்கும்.
ஓடியன் படம் அதுபோல ஒரு கதை என்று தோன்றுகிறது. மெகா ஸ்டார் மம்முட்டி கதை சொல்ல விரிகிறது படம்.
நமது நாயகனும் தாத்தாவிடமிருந்து கற்றுக்கொண்ட 'சித்து' மற்றும் 'கட்டு' வேலைகளை நியாயமான காரணங்களுக்கு மட்டுமே பயன்படுத்துகிறான். இருந்தாலும் கொலை பழி நாயகன் மீது விழ, ஊரைவிட்டு தலைமறைவாகிறான்.
பதினைந்து வருடங்கள் கழித்து சொந்த ஊருக்கு திரும்பி வரும் தன் மீது விழுந்த பழியை எப்படி தீர்க்கிறான் என்பது மீதி கதை.
நாம் மோகன்லால் நடிப்பை எத்தனையோ படங்களில் பார்த்து வியந்திருப்போம், இதிலும் அப்படியே. காசியில் அறிமுகமாகும் அந்த முதல் காட்சி அருமை. எப்போதும் முகத்தில் புன்னகையுடன் இளவயது மற்றும் முதிர்ச்சியான வயது என மாறுபட்ட கதாபாத்திரத்தை அழகாக செய்திருக்கிறார் Complete Actor மோகன்லால்.
பொதுநலன் கருதியோ என்னவோ 'சித்து' மற்றும் 'கட்டு' வேலைகளை பற்றிய டீடைலிங் இயக்குனர் சொல்லாமல் விட்டிருக்கலாம் என்று நினைக்கிறன்.
சண்டை இயக்குனர் பீட்டர் ஹெய்னின் உழைப்பு ஒவ்வொரு சண்டை காட்சிகளிலும் தெரிகிறது. அதற்கேற்றார்போல் லாலேட்டனின் எனர்ஜி லெவல் அசரடிக்கிறது. அந்த கிளைமாக்ஸ் சண்டை காட்சி அருமை.
பிரகாஷ்ராஜ், மஞ்சுவாரியர், சனா அல்தாப், நரேன், இன்னோசென்ட், மனோஜ் ஜோஷி, சித்திக் மற்றும் நம்மூர் மொட்டை ராஜேந்திரன் (கிளைமாக்ஸ் சண்டை காட்சி) என அவரவர் தங்கள் கதாபாத்திரங்களை உணர்ந்து நடித்திருக்கிறார்கள். சாம் சி எஸ் பின்னணி இசை அருமை.
கமர்சியல் பட ரசிகர்களுக்கு ஏற்ற படம் இதுவல்ல.
குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.
- காளிகபாலி
- காளிகபாலி
No comments:
Post a Comment