வேர்க்கடலை, நிலக்கடலை, கலக்காய் என பல பெயரில் அழைக்கபடுகிறது புரதம் நிறைந்த தின்பண்டம்.
எனக்கு மிகவும் பிடித்த திண்பண்டம். என்னுடய பயண பையில் வறுத்த உப்பு வேர்கடலை, கடலை மிட்டாய், மற்றும் கடலை உருண்டை போன்றவை எப்பொதும் இடம் பெறும்.
சிறுவயதில் டவுசர் பாக்கெட்டில் தின்று மிச்சம் வைத்த வேர்க்கடலை
துகள்கள் எப்போதும் இருக்கும். நாளடைவில் டவுசர் பாக்கெட் கறை படிந்து காணப்படும்.
முன்பு மாநகர மின் இரயிலில் சிறு கூடையில் “கடல, கடல ….சால்ட கடல, வறுத்த கட்ல, டைம் பாஸ் கடல” என் அண்ணாக்கள் கூவி கூவி விற்பார்கள். சிறு மூடி அளவு ஓரு ரூபாய், இரண்டு ரூபாய் கடைசியில் ஐந்து ரூபாய் வரை ஆனது. வீடு வந்து சேரும் வரை அதன் சுவை நாக்கில் இருந்து கொண்டே இருக்கும். அவர்களுக்கென்று தனி வாடிக்கையாளர்களும் உண்டு. காலமாற்றத்தால் அவர்கள் மறைந்து போனார்கள். இப்போது அனைத்தும் பாக்கெட்களில், குறைந்தபட்ச விலை பத்து ரூபாய்.
மார்க்கெட்டில் ஒரு படி வேர்க்கடலை ரூபாய் 30/- இரண்டு படி ரூபாய் 50/- உப்பு போட்டு வேக வைத்து பசங்களுக்கு சாப்பிட கொடுக்கலாம். சிறந்த மாலை சிற்றுண்டி.
இப்போது அவித்த கடலை விற்கப்படுகிறது சுமார் ரகம் தான். அதிக உப்பும், பழையதும் கலந்து விற்கப்படுகிறது. சிலது பருப்பு இல்லாமல் காலியாக இருக்கும்.
தள்ளு வண்டியில் மணலில் வறுத்த வேர்க்கடலை, அது வேறு வித சுவை. அதில் உள்ள எண்ணை பசை உறிஞ்சப்பட்டு, கடலை பொன்னிறமாக மொறு மொறுவென்று இருக்கும்.
வீட்டில் பெரும்பாலும் காலை சிற்றுண்டியான இட்லி, தோசைக்கு வேர்கடலை சட்னி ஜோரான இணை.
புளியோதரை, எலுமிச்சை சாதம், சாம்பார் சாதமாகட்டும், ரசம் சாதமாகட்டும், பகலோ, இரவோ தொட்டுக்கொள்ள எண்ணையில் பொரித்து, உப்பு, மிளகாய் தூள் மற்றும் சாட் மசாலா கலந்த வேர்கடலை போதும். சாதம் இறங்கிவிடும்.
ஒன்றும் பாதியாக பொடித்த வேர்க்கடலை தூள் கலந்த முருங்கை கீரை பொரியலை கேழ்வரகு கூழ் உடன் குடிப்பது உடலுக்கு நல்லது.
சமீபத்தில் அலுவலக கேன்டீனில் சாப்பிட்ட பொடித்த வேர்க்கடலை தூள் கலந்த கொத்தவரங்கா பொரியல் நன்றாக இருந்தது.
இப்பொழுது பிரட் மேல் தடவி சாப்பிட வேர்க்கடலை பசை பாட்டிலில் அடைத்து விற்கப்படுகிறது. கொஞ்சம் விலை அதிகம். வாங்கி வந்த இரண்டு நாளிலேயே பசங்க காலி செய்து விடுகிறார்கள்.
எனது முதல் விமான பயணித்தின்போது குளிர்ந்த பீர் உடன் தோல் உரித்த வறுத்த உப்பு வேர்க்கடலையும் சேர்த்து தந்தார்கள்.
வயலில் விளைந்த இளம் வேர்க்கடலை கொத்து சாப்பிட நன்றாக இருக்கும்.
வருடா, வருடா, பெங்களூருவில் அரசு மற்றும் விவசாயிகள் இனைந்து பசவனகுடியில் நடத்தும் பிரசித்தி பெற்ற கலக்காய் திருவிழா நவம்பர் மாதம் நடக்கும். கர்நாடக மாநில விவசாயிகள் தங்கள் நிலத்தில் விளைந்த நிலக்கடலையை சிவனுக்கு காணிக்கை செலுத்துவார்கள். கர்நாடக மாநிலத்தில் உள்ள பல்வேறு மாவட்டகளிருந்தும் விவசாயிகள் நிலக்கடலை கடை விரிப்பார்கள், வித, விதமான கடலை ரகங்கள் வாங்கியும், வகை வகையான கடலை தின்பண்டங்கள் சுவைத்தும் மகிழலாம். நமது மாநில எல்லை மாவட்டமான கிருஷ்ணகிரி, தரமபுரி விவசாயிகள் தங்கள் நிலத்தில் விளைந்த கடலை ரகங்களை விற்பதை காண்லாம். வாய்ப்பு கிடைத்தால் ஒரு நடை போய் வாருங்கள்.
கர்நாடக மாநிலம் சிந்தாமணி எனும் ஊரில் ஒரு வித கார சுவையுடன் வறுத்த வேர்கடலை விற்கிறார்கள். அவ்வூரில் இது பிராதான தொழில். அவ்வூரிலிருந்து யாராவது உறவினர் சென்னை வந்தால் நமக்கும் சேர்த்து வாங்கி வருவார்கள்.
சரி, இவ்வளவு அருமை பெருமை வாய்ந்த நிலக்கடலை பயிரை / கடலைச் சாகுபடியை பிரபலப்படுத்தியவர் திரு.வளவனூர் கோவிந்த அய்யர் என்ற சாதனையாளர். அவர் பட்ட கஷ்டங்கள், அவமானங்கள் கொஞ்சம் நஞ்சம் அல்ல. அவசியம் அதை பற்றி தெரிந்து கொள்வோம், இதோ இந்த சுட்டியை அழுத்தவும்: http://solvanam.com/?p=30613
- காளிகபாலி
Pea nuts were awesome but not the Peanut Butter.
ReplyDeleteI dono how people have it bread.
இவற்றுக்கு மல்லாட்டை என்ற மற்றோரு பெயரும் வழக்கத்தில் உள்ளது..
ReplyDeleteதமிழக ஆந்திர எல்லை கடைகளில் சட்னி என்றாலே வேர்கடலை சட்னி தான்..
சூடான மல்லிப்பூ இட்டலி, தோசைக்கு வேர்கடலை சட்னி என்றால் இரண்டு எண்ணிக்கை அதிகம் உள்ளே போகும்.
தின்ற மிதப்பில் பிறகு மலைப்பாம்பு கணக்கா படுக்கையில் புரண்டு கண்கள் சொருக..சுகம்..சுகம்..