Wonderful Shopping@Amazon

Sunday 19 November 2017

தீரன் அதிகாரம் ஒன்று

இயக்குனர் ஹெச். வினோத் தனது இரண்டாவது பட வாய்ப்பை திறமையாக பயன்படுத்தியிருக்கிறார்.

வாழ்த்துக்கள் வினோத். இதுவும் உண்மை சம்பவங்கள் அடிப்படையில் அமைந்த திரைக்கதை.
கொள்ளையர்களை பற்றிய  இயக்குனரின் இன்போ கிராபிக்ஸ் டீடைலிங் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. அது என்ன ? படத்தில் காண்க.

தான் இயக்குனரின் நடிகன் என மீண்டும் நிரூபித்துதிக்கிறார் கார்த்தி.  பண்பட்ட நடிப்பு.

இயக்குனர் வினோத் - நாயகன் கார்த்தியின் உழைப்பு ஒவ்வொரு பிரேமிலும் மிளிர்கிறது.
கொடூர கொலை-கொள்ளையில் ஈடுபடும் வட இந்திய கொள்ளையர்களை தேடி புறப்படும் தமிழக காவல்துறை குழுவினருக்கு நமது நாயகன் தலைமை தாங்கி கூண்டோடு அழிப்பது தான் கதை.   கதை ஒரு போலிஸ் அதிகாரி பார்வையில் விரிகிறது.

ராஜஸ்தானனின் வறண்ட நில பகுதிகலாகாட்டும், தஞ்சை, திருவாரூர், சென்னை என வான்வழி
காட்சிகளை தனது கேமரா கண்களில் நம் கண் முன் நிறுத்துகிறார் ஒளிப்பதிவாளர் சத்யன் சூரியன்.

போலீசாருக்கு பணியின் பொது ஏற்படும் சிரமங்கள் /அசௌகரியங்கள் படத்தினூடு காணமுடிகிறது.

ராகுல் ப்ரீத் சிங்கின் இயல்பான நடிப்பும், போஸ் வெங்கட்டின் பங்காளிப்பும் அருமை.

ஜிப்ரானின் பின்னணி இசை ஒகே, தீம் மியூசிக் இருந்திருந்தால்.....நன்றாக இருந்திருக்கும்.
அபிமன்யு சிங்கின் வில்லத்தனம் மிரட்டல்.

ராஜஸ்தான் கிராமத்தில் கார்த்தி குழுவினர் மாட்டிக்கொண்டு தவிக்கும் காட்சிராஜஸ்தானில்  நடைபெறும் அந்த பஸ் சேஸ் மற்றும் இறுதி கட்ட காட்சிகள் திக் திக் நிமிடங்கள்.

ரயில் சண்டை, கொள்ளையன் காளியுடன் ஆக்ரோஷ சண்டை வரும் என்று எதிர்பார்த்தேன் மற்றும்
டாக்குமெண்ட்ரி பீல் என இதெல்லாம் எதுவும் இல்லாமல் இயக்குனர் சாமர்த்தியமாக தவிர்த்திருக்கிறார்.


- காளிகபாலி


No comments:

Post a Comment