மாஸ்
மகாராஜா ரவி தேஜா நடித்து தீபாவளிக்கு வந்த படம் ராஜா தி
கிரேட்
பலம்
வாய்ந்த வில்லனை பார்வையற்ற நாயகன் எதிர்கொள்வது தான் கதை. இதிலும் படம் முழுதும் ரவி
தேஜாவின் எனர்ஜி மற்றும் இயக்குனர் அணில் ரவிப்புடியின் இயக்கமும் படத்தில் நம்மை ஒன்ற வைக்கிறது. நாயகனின்
நச் அறிமுகம் கபடி ஆட்டத்தில் தொடங்குகிறது.
முதல்
பத்து நிமிடம் பிரகாஷ்ராஜின் பகுதி. வில்லனின் பலம் பற்றி நமக்கு புரியவைத்து விடுகிறார் இயக்குனர்.
படம்
முழுதும் ஸ்ரீனிவாஸ் ரெட்டியின் நகைச்சுவை கைகொடுக்கிறது.
நாயகனின்
அம்மாவாக வரும் ராதிகாவின் நடிப்பு அருமை.
இரயில்
மீது ஏறி கூகிள் உதவியுடன் வில்லனின் இருப்பிடத்தை அடையும் நாயகனின் உத்தி அருமை.
அடிக்கடி
நாயகன் உதிர்க்கும் வார்த்தை (I'm blind but trained) "நான் பார்வையற்றவன்
ஆனால் பயிற்ச்சி பெற்றவன்".
டார்ஜிலிங்
மற்றும் கிளைமாக்ஸ் சண்டை காட்சிகள் அதிரடி.
இந்திய
சினிமாக்களில் பார்வையற்ற நாயகன் சோகமாக காட்சியளிப்பான், அவனனுக்கு ஒரு காதலி இருப்பாள். ரசிகர்களின் பரிதாபத்தை பெற நிறைய செண்டிமெண்ட் காட்சிகள்
இருக்கும்.
இந்த
படத்தில் அதெல்லாம் இல்லை. இவன் மிகுந்த தன்னம்பிக்கையுடவன்.
எதையும் எதிர்கொள்ள பயிற்ச்சி பெற்றவன். அவன் அம்மாவே அவனது
பலம். காதலியின் அப்பாவை கொன்ற வில்லனை வெற்றி
கொள்வான்.
இன்றைய
காலகட்டத்தில் பார்வையற்றோக்கு தகுந்த
பயிற்ச்சி அளித்தால் அவர்கள் சராசரி மனிதர்கள் போல வாழ்வார்கள். இந்தியாவில் பார்வையற்றோர்க்கு ப்ரைளே
பயிற்ச்சி மட்டுமே அளிக்கப்படுகிறது.
ஒரு சில
தொழில் நிறுவனங்கள் பார்வையற்றோர்க்கு வேலை வாய்ப்பை வழங்குகிறது.
மும்பை
போவாயில் உள்ள மதீரா & மைம் உணவகம் முழுக்க
முழுக்க காது கேளாத மாற்றுதிறனாளிகலால் செயல்படுகிறது. சைகை பாஷையை கொண்டு வாடிக்கையாளர்களுக்கு உணவு பரிமாறப்படுகிறது. இதுபோல அங்கொன்றும் இங்கொன்றுமாக சில நிறுவனங்கள்
மாற்றுதிறனாளிகளை ஆதரிக்கிறது.
சாதனை புரிந்த மாற்றுதினாளிகள் வெளிநாட்டில் ஏராளமானோர் உண்டு. கூகிள் செய்தல் பட்டியல் நீளும். இந்தியாவில் அத்தகையோரை விரல் விட்டு எண்ணி விடலாம்.
மாற்றுதிறனாளிகளுக்கு
நாம் எந்த அளவுக்கு மதிப்பு கொடுக்கிறோம் என்பதை தினசரி நாளிதழில் படித்து
தெரிந்து கொள்ளலாம்.
எனது
சகோதரரும் ஒரு மாற்றுதிறனாளி தான். அவருக்குரிய சலுகைகள் பெற ஒவ்வொரு முறையும் எவ்வளவு
அலையவேண்டியிருக்கிறது தெரியுமா.
மாற்றுதிறனாளிகளுக்கு
இலவச இரண்டு சக்கர வாகன திட்டத்தில் பெற எங்கள் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்
அலுவலகத்தில் மனு கொடுத்தோம். பிறகு எங்கள் மனு
நிராகரிக்கப்பட்டது காரணம் 70 சதவீத ஊனம் இருந்தால் தான் இரண்டு சக்கர
வாகனமாம். அதாவது படுத்த படுக்கையாக இருக்கணும் போல. இது தான் இன்றைய நிலைமை.