Wonderful Shopping@Amazon

Showing posts with label #முள்ளும் மலரும் #கேமரா கவிஞர் பாலுமகேந்திரா #ஷோபா #Best of Jency. Show all posts
Showing posts with label #முள்ளும் மலரும் #கேமரா கவிஞர் பாலுமகேந்திரா #ஷோபா #Best of Jency. Show all posts

Tuesday, 10 September 2019

ஒரு முறை நிகழும் மாயாஜாலம் - 4

முள்ளும் மலரும்
 
சி வருடங்கள் திருவள்ளூர் அருகே உள்ள பட்டறைபெரும்புதூர் என்ற கிராமத்தில் குடியிருந்தோம். தனா அக்கா என்று ஒருவர் இருந்தார். என்னைத் தூக்கி வைத்துக்கொண்டு இந்தப் பாடலை வானொலியில் கேட்டது நினைவிருக்கிறது.

ஒரு பெண்ணின் உணர்வுகளை இதைவிடத் துல்லியமாக வெளிப்படுத்திய பாடல் இருந்தால் சொல்லுங்கள். கேமரா கவிஞர் பாலுமகேந்திரா ஷோபாவை அழகாகக் காட்டியிருப்பார். அப்போது ஷோபாவுக்கு ஏறக்குறைய பதினாறு வயது தான். குறுகிய காலத்தில் தேசிய விருதை வென்ற ஷோபாவின் மறைவு தமிழ் திரையுலகிற்கு பேரிழப்பாகும்.

ஜென்ஸி குரலைப் பற்றிச் சொல்லவே வேண்டாம், தேனினும் இனிய குரல். தொடர்ந்து பாடாமல் போனது என்னைப் போன்ற ரசிகர்களுக்கு வருத்தம்.   Best of Jency இந்தப் பாடல்.

Fusion இசை என்பது இப்போது அதிகமான பயன்படுத்தப்படும் சொல். 40 வருடத்துக்கு முன்பே அதை இந்தப் பாடலில் செய்துவிட்டார் ராஜா சார். பாடல் ஆரம்பத்தில் புதுப் புது இசைத் துணுக்குகள் தெறிக்கும். அப்போது எங்களுக்கு அதுவரை கேட்டிராத புதிய இசை இன்பம். இப்போது கேட்டாலும் புதிது போல இருக்கும்.

அப்போது ஞாயிற்றுக்கிழமைகளில் மாநில மொழி திரைப்பட வரிசையில் இப்படத்தைத் தூர்தர்சனில் ஒளிபரப்பினார்கள். (அப்போது தூர்தர்ஷன் மட்டும் தான்), ஊரே வெறிச். அனைவரும் தொலைக்காட்சி முன்.

நாங்கள் அப்போது சாலையில் மட்டைப்பந்து விளையாடிக் கொண்டிருந்தோம். படத்தின் BGM எங்களை விளையாட விடாமல் செய்தது. மட்டைப் பந்தை போட்டுவிட்டுப் படத்தில் உட்கார்ந்து விட்டோம். 'முள்ளும் மலரும்' படத்தின் இந்தப் பாடல் எப்போதுமே என்னுடைய ஸ்பெஷல்.

வாங்கப் பாடலை கேட்போம்:




குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.



- காளிகபாலி