ஆறிலிருந்து அறுபது வரை (1979)
ரஜினி தனது ஆரம்பக்காலத்தில் வருகிற வாய்ப்பையெல்லாம் தவற விடாமல், கிடைக்கின்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். அதில் 'அவர்கள்', 'கவிக்குயில்', 'மூன்று முடிச்சு', 'புவனா ஒரு கேள்விக்குறி','16 வயதினிலே', 'காயத்ரி', 'ஆறிலிருந்து அறுபது வரை' போன்ற படங்களில் நடித்து தனது நடிப்பால் ரசிகர்களை ஈர்த்தார் என்றே சொல்ல வேண்டும்.
இப்போது நாம் 'ஆறிலிருந்து அறுபது வரை' படம் பற்றிப் பேசுவோம். என் அக்காவுக்கு இந்த படம் மற்றும் படத்தின் வரும் தொடக்கப் பாடல் நிரம்பப் பிடிக்கும். நேரம் கிடைக்கும்போதெல்லாம் சளைக்காமல் இன்று வரை அந்த படத்தை யுடியூப்-இல் பார்த்துவிடுவார். அதுமட்டுமல்ல அவளுக்குப் பழைய ரஜினி படங்கள் அனைத்தும் பிடிக்கும். ஒவ்வொரு படத்தைப் பற்றியும் என்னிடம் விவரிப்பார். பள்ளி பருவத்தில் "மை நேம் இஸ் பில்லா" என்ற பாடல் தூர்தர்சன் "ஒளியும் ஒளியும்" நிகழ்ச்சியில் கேட்கும்போது செம உற்சாகமாக இருக்கும்.
இயக்குநர் எஸ்.பி. முத்துராமன் இயக்கி 1979 ஆம் ஆண்டு வெளிவந்த "ஆறிலிருந்து அறுபது வரை"
ரஜினிகாந்தின் முந்தைய படமான "புவனா ஒரு கேள்விக்குறி" படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பஞ்சு அருணாசலம் எழுதிய கதையில், இயக்குநர் எஸ்.பி.முத்துராமன், மென்சோகம், தியாகம் நிறைந்த கதாபாத்திரத்தில் ரஜினிகாந்தை வைத்து "ஆறிலிருந்து அறுவது வரை" படத்தை இயக்க தொடங்கினார். ஆனால் ரஜினிக்குச் சிறிது தயக்கம், இப்படிப்பட்ட மெலோடிராமாவை ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா என்று ?அவரை சமாதானப்படுத்திய இயக்குநர் அதுவரை எடுத்த 5000 அடி திருத்தப்பட்ட பதிப்பைக் காட்டினார், அதைப் பார்த்து உற்சாகமடைந்த ரஜினி முழு ஈடுபாட்டுடன் நடித்துக் கொடுத்தார். படமும் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுடன் மாபெரும் வெற்றியை அடைந்தது.

சென்னை
மிட்லாண்ட் திரையரங்கில் இப்படம் 25 வாரங்கள் ஓடியது. தெலுங்கில் சோபன்
பாபு நடிப்பில் "மகாராஜு (1985)" என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது.
கன்னடத்தில் அம்பரீஷ் நடித்து "பூர்ண சந்திரா" என்ற பெயரில் ரீமேக்
செய்யப்பட்டது.
- காளிகபாலி
நன்றி: https://www.youtube.com/