Wonderful Shopping@Amazon

Showing posts with label #எஸ்ஜானகி #எஸ்ஜானகிபாடல்கள் #ஜானகிஅம்மா #SJanaki #SJanakiSongs #SJanakiAmma #SJanakiVoice. Show all posts
Showing posts with label #எஸ்ஜானகி #எஸ்ஜானகிபாடல்கள் #ஜானகிஅம்மா #SJanaki #SJanakiSongs #SJanakiAmma #SJanakiVoice. Show all posts

Wednesday, 16 December 2020

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-104

ராஜாவின் டவுன் பஸ் பாடல்கள்

காலை 6.00 மணி

கும்பகோணம் பேருந்து நிலையம் - திருவிடைமருதூர் மகாலிங்கசாமி கோவிலுக்குப் பரிகார பூஜை செய்ய மயிலாடுதுறை செல்லும் தனியார் பேருந்தில் உட்கார்ந்திருந்தோம். பயணிகள் வர வர பேருந்து நிரம்பியது. அப்போது பாடல்களை ஒலிக்கவிட்டார் ஓட்டுநர். 'கோவில்காளை' படத்தில், பாடகர் மனோ மற்றும் ஜானகி அம்மா பாடிய "சோலைக்குயில்கள் ரெண்டு " என்ற இனிமையான முதல் பாடல், பேருந்து கிளம்பியிருந்தது. பேருந்தில் அருமையான ஒளியமைப்புச் செய்திருந்தார்கள். பாடலில் இடைஇடையே வரும் தபேலா இசைக்கருவியின் சத்தம் கூடத் துல்லியமாகக் கேட்டது. இரண்டாவதாகப் 'பாண்டிய நாட்டுத் தங்கம்' படத்திலிருந்து "சிறு கூட்டுல..." பாடல் ஒளிபரப்பானது, அதற்குள் நாங்கள் இறங்கவேண்டிய நிறுத்தம் வந்ததால் இறங்கிவிட்டோம். கோவிலிலிருந்து தாங்கும் விடுதிக்குத் திரும்பியவுடன் இந்தப் பாடலை அலைபேசியில் கேட்டுக்கொண்டிருந்தேன்.

இளையராஜா பாடல்களைக் கேட்கத் தமிழகம் முழுதும் தனியார் பேருந்துகளில் பயணம் செய்யவேண்டும் வேண்டுமாம் - இது நண்பனின் ஆசை. நீங்கள் தொலைக்காட்சியில் கேளுங்கள், அலைபேசியில் கேளுங்கள், சிறந்த தலையணியுடன் கேளுங்கள், வானொலியில் கேளுங்கள், காரில் கேளுங்கள் ஆனால் எல்லாவற்றையும் விடப் பேருந்தில் பயணம் செய்யும்போது ஜன்னலைப் பார்த்துக்கொண்டே இளையராஜாவின் பாடல்களைக் கேட்கும்போது (அதே பாடல்கள் தான்) ரம்மியமாக ({வேறு மாதிரி) இருக்கும்.

ஒரு முறை தனியார் மொபஸல் பேருந்தில் பயணம் செய்யும்போது, இனிமையான ராஜா பாடல்கள் பயணத்தைச் சுகமாக்கியது. 'சகலகலா வல்லவன்' படத்தில் இடம்பெற்ற "நிலா காயுது ..." பாடல் ஒலிக்க ஆரம்பித்தது. பேருந்திலிருந்த பயணிகள் கொஞ்சம் நெளிய ஆரம்பித்தார்கள். இடையில் வரும் முத்த சத்தம் ..பயணிகள் முகத்தில் நமட்டுச் சிரிப்பு ..ஓட்டுநருக்கு என்ன தோன்றியதோ சடாரெனப் பாய்ந்து பாடலை மாற்றி விட்டார் .. என்ன செய்யச் சிலருக்கு இப்படியும் சங்கடம்.

நம்மிடம் இருப்பதை விட நம்மூர் ஓட்டுநர்களிடம் தான் இளையராஜாவின் அத்தனை பாடல்கள் அடங்கிய ஒலிநாடகள்/சிடிக்கள் இருக்கிறது. நீங்கள் பிரதி எடுக்கக் கேட்டுப் பாருங்களேன், அவ்வளவு சீக்கிரத்தில் கொடுக்கமாட்டார்கள். எனக்குத் தெரிந்த கால் சென்டர் கார் ஓட்டுநர் வருத்தத்துடன் கூறியது : " ராஜா சார் பாட்டு கேசட்ட எவனோ ஆட்டயபோட்டான், கஷ்டப்பட்டுச் சேர்த்துவச்சது.." பின்னே உட்கார்ந்து வண்டி ஓட்டற்றவனுக்குத் தான் கஷ்டம் தெரியும், ராஜாவின் பாடல்கள் தான் அவர்களுக்குத் துணை. அவர்களுக்கு மட்டுமல்ல நமக்கும் தான்.

இசைஞானியின் அதிகாரப்பூர்வ தலத்தில் "டவுன் பஸ் பாடல்கள் தொகுப்பை" கேட்டு மகிழுங்கள்.



நன்றி:Youtube 

 குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.


- காளிகபாலி 

 


Friday, 20 September 2019

ஒரு முறை நிகழும் மாயாஜாலம் - 9

பகல் நிலவு (1985)

பல்லவி ஆரம்பத்தில் ஆர்ப்பரிக்கும் வயலின் இசைக் கோர்வை நம்மை வரவேற்கும், புல்லாங்குழல் கிச்சு கிச்சு மூட்டும்.  ஜானகி இளங்குரலில் பாட அதைத் தொடர்ந்து ராஜா உள்ளே வருவார், பிறகு உங்கள் கற்பனை சிறகுகள் பறக்க ஆரம்பிக்கும். பாடல் ஆரம்பம் முதல் கடைசி வரை ஒரு வேகம் இருக்கும் கண்ணனை மூடிக் கொண்டு இந்தப் பாடலை இரவு தலையணியுடன் (Headphone), மெல்லிய இசையுடன் கேளுங்கள். மனது குதூகலமாகும். பாடல் இடையே இடையே வரும் ஜானகி-ராஜா ஹம்மிங் அலாதியாக இருக்கும்.  பாடல் தொடக்க முதல் கடைசிவரை ஒரு சீரான வேகம் இருக்கும். 

எப்போதுமே இஃது என்னுடைய விருப்ப பாடல். இந்தப் பாடலை ஒவ்வொரு முறை கேட்கும்போதெல்லாம், எனக்குப் புதிய எனர்ஜி கிடைக்கும்.   காலங்கள் கடந்தாலும் இப்போதும் இந்தப் பாடல் புத்தம் புதுசாக இருக்கிறது. 

பாடலை படமாக்கிய விதம் கூட அருமையாக இருக்கும். முரளி-ரேவதி Charm. பாடல் முழுதும் நம்மை வசீகரிக்கும். இது காதலர்களின் தேசிய கீதம் என்று சொல்வேன் நான் .

இயக்குநர் மணிரத்னம் - இளையராஜா தமிழில் இணைந்து நிகழ்த்திய முதல் மாயாஜாலம் - "பகல் நிலவு" படம். இதோ அந்த பாடல்:





நன்றி: Youtube



குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.




- காளிகபாலி