விக்ரம் (1986)
சமீபத்தில் தொலைக்காட்சியில் கமல்ஹாசன் நடித்த "விக்ரம்" படத்தைப் பார்த்தேன். அப்பவே அதிகப் பொருட்செலவில் உருவான "விக்ரம்" - 1986 ஆம் ஆண்டுக் கோடை விடுமுறையில் வந்த Spy திரில்லர் வகைப் படம். சுஜாதா அவர்களின் கதையில் உருவான படம். ஜெய்சங்கர் படங்களுக்குப் பிறகு வந்த Spy திரில்லர் படம் என்று நினைக்கிறன. சத்யராஜின் வித்தியாசமான பெயர், ராக்கெட் தொழினுட்பம், ராஜஸ்தான் பாலைவனம், ஜனகராஜ்-மனோரமா நகைச்சுவை பகுதி, அம்ஜத்கான், டிம்பிள் கபாடியா என அப்போது தமிழ் சினிமா ரசிகனுக்குப் புதிய விஷயங்கள் சேர்த்திருப்பார் கமல். எப்போதுமே கமல் தமிழ் சினிமா ரசிகனின் ரசனையையும் மேம்படுத்தி வந்திருக்கிறார். சிறுவயதில் பார்த்தபோது ஆங்கிலப் படம் பார்த்த feel கிடைத்தது. அப்போது சுமாராக ஓடியிருந்தாலும் இப்போதும் engaging to watch.
சரி விசயத்துக்கு வருவோம், இந்தப் படத்தில் அருமையான பாடல் உண்டு, "மீண்டும் மீண்டும் வா.... மீண்டும் வேண்டும் வா" ஜானகி-SPB யின் இணை பாடிய பாடலை இரவில் கேட்டுப் பாருங்கள். எனக்குப் பிடித்த ராஜாவின் பாடல்களில் இதுவும் ஒன்று.
நன்றி: Youtube
குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.
- காளிகபாலி