சாந்தி நிலையம் (1969)
சாந்தி நிலையம் படம் பொன்விழா ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இயக்குநர் திரு ஜி எஸ் மணி இயக்கி, ஜெமினி எஸ் எஸ் வாசன் அவர்கள் தயாரிப்பில், ஜெமினி கணேசன்-காஞ்சனா நடித்த சாந்தி நிலையம் - அப்போது 2-3 முறை தூர்தர்ஷனில் ஒளிபரப்பானது. பேமிலி திரில்லர் வகை படம். பேமிலி சப்ஜெக்ட்டில் எப்படி திரில்லர் விஷயங்களைச் சேர்க்கமுடியும். படம் பாருங்கள் புரியும். ஜெமினி கணேசன் மென்சோகமுடைய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். விச்சு டார்லிங்
இசையமைத்த "இயற்கை என்னும் " (SBP. பாடிய பாடல்), "கடவுள் ஒருநாள்",
"பூமியில் இருப்பதும் வானத்தில்", "இறைவன் வருவான்" போன்ற பாடல்கள்
அனைத்தும் சூப்பர் ஹிட். இப்போது கேட்டாலும் அவ்வளவு இனிமையாக இருக்கும்.
சரி விஷயத்துக்கு வருகிறேன், டிஎம்எஸ் அவர்கள் ஒவ்வொரு திரை ஆளுமைக்கும் (எம் ஜி ஆர், சிவாஜி, etc.) ஏற்றாற்போல் பாடுவதில் வல்லவர். இந்த படத்திலும் நாகேஷ் அவர்களுக்குக் குரல் கொடுத்திருப்பார். கிட்டதட்ட
நாகேஷ் பாடுவது போலவே இருக்கும். அந்தளவுக்குக் குரலை Synch செய்து பாடியிருப்பார். இன்னொன்று, ஸ்டூடியோவில் சில ஷாட்கள், சில வெளிப்புற ஷாட்கள், இரண்டையும் இணைத்து ஹீலியம் வாயு நிரப்பப்பட்ட பலூனில் பாடுவது போலப் பாடல் படமாக்கப்பட்டிருக்கும். நீங்கள் பார்த்தீர்களானால், அப்பவே இது போன்ற முயற்சி வெகுவாக ரசிக்கப்பட்டது.
குறிப்பு : மிகப்பெரிய வெற்றிபெற்ற, ஆஸ்கார் மற்றும் பல விருதுகளைக் குவித்த, இன்றளவும் உலகின் சிறந்த பட வரிசையில் இடம்பெற்ற Sound Of Music என்ற ஹாலிவுட் படத்தின் தழுவல் என்றும் சொல்வதுண்டு.
நன்றி: Youtube
குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.
- காளிகபாலி