'டிக் டிக் டிக்' (1981)
வார இறுதி நாள் கமல்-மாதவி பாடல்களுடன் கழிந்தது. இதுவும் ஒரு துள்ளலான பாடல் தான். கமல்-மாதவி கெமிஸ்ட்ரி, பிசிக்ஸ் எல்லாம் அபாரமாக இருக்கும். மாணவர் பருவத்தில் வானொலியில் அடிக்கடி கேட்ட பாடல். 'மோனோ' இசை தான் அதிலேயே வயலின், கிட்டார் போன்ற இசை கருவிகளின் துல்லியமான இசை தடையின்றி காதில் பாய்ந்து, மனதில் பதிந்தது. இந்த பாடலை எப்போது கேட்டாலும் பழைய நினைவுகள் ஒன்றின் பின் ஒன்றாக நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை.
இயக்குனர் இமயம் பாரதிராஜா இயக்கி, கமல்-மாதவி நடித்து 1981-ஆம் ஆண்டு தீபாவளி அன்று வெளியான 'டிக் டிக் டிக்' படத்தில் கவிஞர் வைரமுத்து எழுதி, ராஜா சார் இசையில் இடம்பெற்று, தாசேட்டன்-ஜென்ஸி பாடிய "பூ மலர்ந்திட .." என்ற இனிமையான Semi-classic பாடல். நடனத்தின்போது மாதவியின் கண்கள் அப்பப்பா Scorching Beauty.. என்ன ஓர் பாவம். பாடல் இடையில் தாசேட்டன் "ஐலவ்யூ, ஐலவ்யூ..ஐ லவ் யூ"....... என ஹம் செய்யும் அழகே அழகு.
"படுக்கையில் பாம்பு நெளியுது
தலையணை நூறு கிழியுது
நீ அணிகிற ஆடையில் ஒரு நூலென தினம்
நான் இருந்திட ஸநிதப மபதநி.."
சரி, நீங்களும் இந்த பாடலை கேட்டு ரசியுங்கள்:
நன்றி:Youtube
குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.
- காளிகபாலி
No comments:
Post a Comment