எத்தனையோ காதல் படங்கள் வந்திருக்கிறது, வந்துகொண்டிருக்கிறது. ஒவ்வொன்றும் ஒரு ரகம். குடும்பம், ஆக்ஷன், மற்றும் பேய் படங்கள் வந்து ஓய்ந்து பிறகு. மீண்டும் காதல் படங்கள் வந்து ரசிகனை ஆசுவாசபடுத்தும். காதல் படங்களுக்கு என்றுமே மவுசு இருக்கத்தான் செய்கிறது.
இந்தாண்டின் இறுதியில் தெலுங்கில் வந்திருக்கும் Musical Romantic Comedy படம் படி படி லேசெ மனசு.
எந்த ஒரு நடிகரும் கொஞ்சநாள் தான் காதல் படங்கள் நடிக்கமுடியும். ஒவ்வொரு நடிகருக்கும் அவர்கள் திரை வாழ்வில் காதல் படங்கள் பெரு வெற்றியை தேடி தந்திருக்கும்.
சர்வானந்த் - தெலுங்கு திரையுலகில் ரன் ராஜா ரன், மல்லி மல்லி இதி ரன்னி ரோஜு, எக்ஸ்பிரஸ் ராஜா, ராஜாதி ராஜா, ஷதமானம் பவதி, ராதா, மஹானுபாவுடு என வித்தியாசமான கதைகளில் நடித்து வெற்றிகளை குவித்துவரும் நடிகர். காமெடி, ஆக்ஷன் என மனிதர் கலந்து கட்டி நடிக்கிறார். 100% பொழுபோக்கு அம்சங்கள் அவர் படங்களில் நிச்சயம் இருக்கும்.
பெரிய நடிகர் நடித்த படமும், சர்வானந்த் நடித்த 'ஷதமானம் பவதி' படமும் ஒரே நாளில் வெளியானது. ஆனால் 'ஷதமானம் பவதி' படம் பெரிய நடிகரின் பட வசூலை பாதித்தது. குடும்ப மாண்புகளை சொன்ன 'ஷதமானம் பவதி' ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றது.
ஃபிடா, எம்சிஏ போன்ற படங்களில் நடித்த சாய் பல்லவிக்கு இது மூன்றாவது தெலுங்கு படம்.
சரி விஷயத்துக்கு வருகிறேன்..... 'படி படி லேசெ மனசு...' என்ன ஒரு அருமையான பெயர்.. 'விழுந்து விழுந்து எழும் மனசு..' என்று பொருள் கொள்ளலாம். சர்வானந்த் மற்றும் சாய் பல்லவி நடித்து வெளிவந்திருக்கும் படத்தை பற்றி பார்ப்போம்.
நாயகன் விழுந்து விழுந்து நாயகியை காதிலிக்கிறான் ஒரு பூகம்பம் அவர்களை பிரிக்க, அவர்கள் மீண்டும் எப்படி ஒன்று ஒன்று சேர்கிறார்கள் என்பது மீதி கதை. காதல், காதல், காதல், பிரேக்-அப் மீண்டும் காதல், காதல் சுபம்.
சர்வானந்த் (சூர்யா) - சாய் பல்லவி (வைஷு) ...ப்பா என ஒரு கெமிஸ்ட்ரி. சாய் பல்லவி துரு துரு, கண்கள்........காதல், சோகம் என வாவ்சொல்ல வைக்கிறார்...
நாயகனுக்கு முத்தத்தை மொத்தமாக வரி வழங்குகிறார் நாயகி.
விஷால் சந்திரசேகரின் இசையில் "படி படி லேசெ மனசு", "கல்லோலம்",
"ஹ்ருதயம் ஜார்பி...", "ஏமை போயாவே..","ஓ மை லவ்லி.." போன்ற பாடல்கள் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும். பின்னணி இசை சுமார்.
ஹௌரா பாலம், டம் டம் ரயில் நிலையம், ஹூக்லி படகு குழாம், கல்கத்தாவின் நெருக்கமான வீதிகள் என ஒளிப்பதிவாளர் ஜே கே வின் கேமரா நம்மை அழைத்து செல்கிறது.
சில படங்களில் துணை கதாபாத்திரங்கள் நமக்கு பிடிக்கும் காரணம் அவர்கள் இயல்பான நடிப்பு நம்மை. இதில் சாய் பல்லவிக்கு அப்பாவாக வரும் முரளி சர்மா வெகு இயல்பாக நகைசுவை கலந்து நடித்திருகிறார். மெயின் வில்லன், போலீஸ் என கலக்கியவர் இப்பொது அப்பா வேடங்களில் முத்திரை பதித்து வருகிறார்.
சாய் பல்லவிக்கு தோழியாக வரும் நடிகை Cute..!
ஹௌரா பாலம், டம் டம் ரயில் நிலையம், ஹூக்லி படகு குழாம், கல்கத்தாவின் நெருக்கமான வீதிகள் என ஒளிப்பதிவாளர் ஜே கே வின் கேமரா நம்மை அழைத்து செல்கிறது.
சில படங்களில் துணை கதாபாத்திரங்கள் நமக்கு பிடிக்கும் காரணம் அவர்கள் இயல்பான நடிப்பு நம்மை. இதில் சாய் பல்லவிக்கு அப்பாவாக வரும் முரளி சர்மா வெகு இயல்பாக நகைசுவை கலந்து நடித்திருகிறார். மெயின் வில்லன், போலீஸ் என கலக்கியவர் இப்பொது அப்பா வேடங்களில் முத்திரை பதித்து வருகிறார்.
சாய் பல்லவிக்கு தோழியாக வரும் நடிகை Cute..!
இயக்குனர் ஹனு ராகவபுடியின் நான்காவது படம் படி படி லேசெ மனசு...! இடைவேளைக்கு பிறகு படம் கொஞ்சம் மெதுவாக நகர்கிறது மற்றபடி காதல் இசை பட ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும் இந்த படம்.
குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.
- காளிகபாலி