Wonderful Shopping@Amazon

Showing posts with label # ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-23 # தீவார் (1975). Show all posts
Showing posts with label # ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-23 # தீவார் (1975). Show all posts

Monday, 28 October 2019

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-23

இந்திய சினிமாவில் இடம்பெற்ற சிறந்த ஆக்ஷன் பிளாக் எது தெரியுமா?

எத்தனையோ படங்களில் சண்டைக் காட்சிகளைப் பார்த்து ஆரவாரம் செய்து கைதட்டி ரசித்திருப்போம். இன்று வரை இந்திய சினிமாவில் இது போன்றதொரு சண்டைக் காட்சி இடம்பெறவில்லை என்பதே உண்மை. இன்றைய நவீன சினிமாவில் சண்டைக் காட்சிகளில் நிறைய மெனக்கெடல்கள், பாதுகாப்பு அம்சங்கள் இருந்தாலும், சட்டென்று மனதில் பதிய மறுக்கிறது. நான் சொல்வது சலீம்-ஜாவேத் எழுத்தில் உருவான மற்றொரு வெற்றிப்படமான அமிதாப் நடித்த "தீவார்" (1975) என்ற மிகப்பெரிய வசூல் சாதனை படைத்த இந்தி படத்தில் இடம்பெற்ற முக்கியச் சண்டைக் காட்சி.

"தீவார்" படத்தின் மறுஆக்கம் தமிழில் ரஜினிகாந்த் நடித்து "தீ" (1981.) என்ற பெயரில் வெளியானது. பள்ளி நாட்களில் விசிஆர் - வீடியோ கேஸட் - இல் பார்த்தப்படம். ரஜினி நடித்த படங்களில் என்னுடைய  All time favorite. இது ரீமேக் படம் என்றெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனால் இதிலும் அந்தச் சண்டைக் காட்சி அதே லெவலில் இருக்கும். யார் இதில் பெஸ்ட் என்றெல்லாம் கணிக்கமுடியாது. இரண்டுமே கிளாஸ் ரகம் தான். யூடியூப் சேனல் வந்த பிறகு அடிக்கடி பார்ப்பதுண்டு. இதோ அந்தக் காட்சியைக் கண்டு ரசிப்பீர்:






நன்றி: Youtube


குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.



- காளிகபாலி