Wonderful Shopping@Amazon

Saturday 2 September 2017

ஆளை கொல்லும் நீலத்திமிங்கலம்




ப்ளூ வேல் விளையாட்டு,  நீல திமிங்கலம் , ஆளை கொல்லும் நீலத்திமிங்கலம். தினசரிகளில் இப்போது நாம் அன்றாடம் படிக்கும் செய்தி இது.

ப்ளூ வேல் விளையாட்டு விளையாடிய இளம் மாணவர் மற்றும் இளைஞர்களின் தற்கொலை. படிக்கும் போதே நெஞ்சு பதறுகிறது.

மாணவர் மற்றும் இளைஞர்களின் இத்தகைய நிலைமைக்கு யார் காரணம்?
நாமும் தான். அது தான் உண்மை.

இன்றைய மாணவர் மற்றும் இளைஞர்களுக்கு மைதான விளையாட்டு எட்டாக்கனி ஆகிவிட்டது. வணிக வளாகங்கள், சந்து பொந்துகளில் நடக்கும் பள்ளிகள் நாட்டில் நிறைய உண்டு.

உடற்கல்வி மற்றும் விளையாட்டு ('பீட்டி') வகுப்பு என்ற ஒன்று இன்றைய பள்ளி அட்டவணைகளில் உண்டா என்று தெரியவில்லை. பெரும்பாலான பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியரே இல்லை. 

பெரும்பாலும் பள்ளி மைதானம் ஆண்டு விழா நடத்த மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.

என்னுடை பள்ளி நாட்கள் பெரும்பாலும் விளையாட்டு மைதாங்களில் கழிந்தது. கிரிக்கெட், கோகோ, ஐஸ்பாய், திருடன் போலீஸ், கால்பந்து, கபடி மற்றும் பிற விளையாட்டுகள்.

வீடு அருகில் உள்ள விளையாட்டு மைதாங்களில் கில்லி, கோலி, நொண்டி  மற்றும் சில விளையாட்டுகள்.

மேற்சொன்ன விளையாட்டுகள் விளையாடிய கடைசி தலைமுறை நாங்கள்.

இன்றைய குழந்தைகளை மைதானத்துக்கு அனுப்பவே பயபடுப்படுகிறோம், எங்கே குழந்தைகள் பிறருடன் சேர்ந்து கேட்டு போய் விடுமோ என்ற தேவையற்ற பயம். அவ்வுளவு ஏன் பக்கத்துக்கு வீட்டு பிள்ளைகளுடன் கூட சேர்ந்து இருக்க விடுவதில்லை நாம்.

நகரத்தில் வாழும் குழந்தைகள் தொலைக்காட்சி பெட்டியே கதி என்று கிடக்கிறது, டோரிமான், சின்சான், பென்டன், சோட்டா பீம் என மூழ்கி கிடக்கிறார்கள்
 
சரி, ப்ளூ வேல் விளையாட்டு மட்டும் தான் மாணவர் / இளைஞர்களை கொல்லுதா?

இன்றைய மாணவர் / இளைஞர்கள் நீல திமிங்கலம் ரூபத்தில் பல ஆபத்துக்கள் எதிர்கொள்ள வேண்டி உள்ளது.

- அதிக மதிப்பெண் வேண்டி மன அழுத்தத்துக்கு ஆளாகும் மாணவர்கள்.


- பெற்றோரின் அதீத எதிர்பார்ப்பு. பிறர் முன் கண்டிப்பு காட்டுவது


- பெற்றோர் தங்களுடைய நிறைவேறாத ஆசைகளை பிள்ளைகள் மீது  
  திணிப்பது.


- சமூக ஏற்றதாழ்வுகள், வெளி உலக ஏமாற்றங்கள்


- சாதி வேறுபாடுகள்.


- வறுமை மற்றும் அரசின் கொள்கை.

இதை எல்லாம் புரிந்துகொண்டு இனியாவது பிள்ளைகளை நண்பர்கள் போல் பாவித்து அவர்களின் உணர்வுகளை மதிப்போம். அவர்களோடு அதிக நேரம் செலவழித்தாலே போதும். தங்களுடைய மனக்குறைகளை நம்மிடம் பகிர்ந்துகொள்ள ஆரம்பித்துவிடுவார்கள்.

எல்லாவற்றுக்கும் மேல் அவர்கள் என்ன 'மெட்டீரியல்' (Material) என்று புரிந்துகொண்டாலே போதும் பாதி சங்கடங்களை தவிர்க்கலாம். அதற்கேற்றாற்போல் நாம் அவர்களை நாம் வழி நடத்தலாம்.

- காளிகபாலி